யாழ் - பருத்தித்துறையில் சமையல் எரிவாயுவுக்காக மக்கள் வரிசை!
யாழ்ப்பாணம்(Jaffna) - வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் மக்கள் ஏரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்க்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக லாவ் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் இன்றும் (16.12.2024) லாவ் எரிவாயு விற்பனைக்கா வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
இதேவேளை, இந்த மாதம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ (Litro) நிறுவனம் அறிவித்தது.
சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாய்விற்கும் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை1,482 ரூபாய்விற்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.