
சிறுமி ஒருவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொடுத்த இன்ப அதிர்ச்சி
இரட்டை தட்டு பஸ்ஸை பாடசாலை நூலகமாக்கி சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார் ஜனாதிபதி.
மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நடமாடும் நூலகம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது
இதில் பழைய இரும்புக்கு விற்கப்படவிருந்த இரட்டை தட்டு பஸ்ஸை பாடசாலை நூலகமாக்கி குறித்த சிறுமிக்கு ஜனாதிபதி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்,