யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | 2 People Drowned Sea In Jaffna Were Rescued Aliveசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார்.

இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.