யாழ்.போதனா வைத்தியசாலையில் முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.

நாவற்குழி கிழக்கு, கைதடியைச் சேர்ந்த கந்தையா ஆனந்தராசா என்ற 65 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு | Elder Collapses And Dies At Jaffna Hospital

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டுள்ளார்.

மாரடைப்புக் காரணமாகவே அவர் மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.