முழுத் தேவையையும் ஏற்ற சீனா: இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் பாரிய மானியம்

முழுத் தேவையையும் ஏற்ற சீனா: இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் பாரிய மானியம்

2025 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையையும் சீனா மானியமாக வழங்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 10,096 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் பாடசாலை சீருடை துணி வழங்கப்படும்.

2023 ஆம் ஆண்டில், மொத்தம் 4,585,432 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றிருந்த நிலையில், 70 சதவீத சீருடைகள் சீனாவால் மானியமாக வழங்கப்பட்டன, மீதமுள்ள 30% உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ. 2,493,762 மில்லியன் செலவில் பெறப்பட்டது.

அத்தோடு, 2024 இல், 4,559,420 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றதோடு, 80 சதவீத துணி (9,259,259 மீட்டர்) சீனாவால் மானியமாக வழங்கப்பட்டது, அதன் மதிப்பு ரூ. 5,317 மில்லியன் ஆகும்.

முழுத் தேவையையும் ஏற்ற சீனா: இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் பாரிய மானியம் | China Provide Free School Uniforms For Sri Lanka

எஞ்சிய 20% (1,938,399 மீற்றர்)  இலங்கை அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் லிமிடெட் மூலம் மானியமாக, அமைச்சரவை அனுமதியுடன், ரூ. 970 மில்லியன் செலவில் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான, முதலாம் வகுப்பு மாணவர்கள், சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் மற்றும் முதன்முறையாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் என மொத்தம் 4,640,086 மாணவர்கள் பாடசாலை சீருடைத் துணிகளைப் பெறுவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முழுத் தேவையையும் ஏற்ற சீனா: இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் பாரிய மானியம் | China Provide Free School Uniforms For Sri Lanka

இதன்படி, 2025 ஆம் ஆண்டின் மொத்தத் தேவையான 11,817 மில்லியன் மீட்டர் துணியானது சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்படவுள்ளது.