யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | 3 People Die In Two Days Due To Fever In Jaffna

அதேபோன்று காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயதுடைய ஒருவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | 3 People Die In Two Days Due To Fever In Jaffna

உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது,

இரண்டு நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | 3 People Die In Two Days Due To Fever In Jaffna

கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

ஆனால் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம்.

கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்த பின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும்.

யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | 3 People Die In Two Days Due To Fever In Jaffna இருப்பினும், பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது.

மேலும், காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.