யாழில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
யாழ். பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் பாதுகாப்பு கம்பி வலைகள் இடப்பட்டுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த பெண்ணின் சடலம் பாதுகாப்பு கம்பி வலைகள் இடப்பட்டுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.