யாழ் சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை ; கணவனின் பரபரப்பு புகார்

யாழ் சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை ; கணவனின் பரபரப்பு புகார்

யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தயாபராஜ் உதயகலா தம்பதியினர் யுத்தம் முடிந்த பின்னர் பல்வேறு நிதிக்குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர்.

யாழ் சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை ; கணவனின் பரபரப்பு புகார் | Husband S Sensational Meted Out Wife Jaffna Prison

பின்னர் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் தப்பிச் சென்றனர். அங்கு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மீண்டும் சட்டவிரோத இலங்கைக்குள் நுழைந்திருந்தனர்.

பின்னர் சர்வமக்கள் கட்சியென்ற பெயரில் உதயகலா ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார். மேலும் தனது மனைவி மீது தகாத துஸ்பிரயோக முறைகளை சிறையில் நடத்தியுள்ள குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள்ளே சிறைச்சாலை ஆட்கள் இருக்கும் போதே சிறைச்சாலை அதிகாரிகளால் ஆடைக்களை கலட்ட வைத்து மானபங்கம் செய்துள்ளனர்

இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.