வெற்றிக்கு இதுவே காரணம்: ரகசியத்தைப் பகிர்ந்து கொண்ட சுந்தர்பிச்சை

வெற்றிக்கு இதுவே காரணம்: ரகசியத்தைப் பகிர்ந்து கொண்ட சுந்தர்பிச்சை

தனது நினைவுகளை யூடியூபில் பகிர்ந்துகொண்ட சுந்தர்பிச்சை இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல சாதனையாளர்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கொண்டு சேர்க்கும் முயற்சியில் யூடியூப் இறங்கியுள்ளது.

இதற்காக "Dear Class of 2020" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை யூடியூப் நடத்துகிறது. இதன் மூலம் பல சாதனையாளர்கள் தங்களது வெற்றிக்கதைகளை யூடியூபில் பேசி வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர்பிச்சையும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார். ஆனால் அதை நான் ஒரு மாத சம்பளமாக பெறுகிறேன்.

நான் தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர் கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்கு வகித்த இவர்,

2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டதோடு 2017ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பெபட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து தற்போது அதற்கும் சி.இ.ஓவாக வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.