யாழில் கோர விபத்து: பாடசாலை மாணவன் பலி
யாழ்ப்பாணம் (Jaffna) - சுழிபுரம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (5.12.2024) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள் சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த மாணவன் பட்டாரக வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தீவிர தன்மையை கருத்திற் கொண்டு மூன்றாம் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்ட போது உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த இடத்தில் இருந்து அகற்றபட்டிருந்த மோட்டார் சைக்கிளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.