வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் வாக்களிக்கும் முறை - தேர்தல் ஆணைக்குழு

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் வாக்களிக்கும் முறை - தேர்தல் ஆணைக்குழு

வாக்காளர் அட்டைகள் கிடைக்காத போதிலும் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகளை பயன்படுத்தி தமது வாக்குகளை அளிக்க முடியும்

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, முதியோர் அடையாள அட்டை, பிக்கு அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழு வழங்கிய தற்காலிக அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களம் புகைப்படத்துடன் வழங்கியுள்ள தற்காலிக அடையாள சான்றிகழ் என்பவற்றை பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.