லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் : வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் : வெளியான அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இம்முறை எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் : வெளியான அறிவிப்பு! | Litro Gas Price Revision Tomorrow

அதற்கான முன்மொழிவுகள் நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்படாத நிலையில், இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.