முல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

முல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் நேற்றையதினம் (08.06.2020) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி,நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க. தவராசாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்படவுள்ளதாக நினைவுக்கல்லில் பெயர் பொறிக்கப்பட்ட போதும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை.

மத்திய பேருந்து நிலையம் முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா செலவில் கட்டட வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 65 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

குறித்த நிகழ்விற்கு அரச பேருந்துகள் மாத்திரமே வருகை தந்த நிலையில் தனியார் பேருந்துகளோ பேருந்து உரிமையாளர்களோ வருகை தரவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரஅபிவிருத்திக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நகருக்கான பேருந்து நிலையமாக இது அமையவில்லை என பல சமூக நலன் விரும்பிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.