நாடு திரும்பிய மற்றுமொரு குழு

நாடு திரும்பிய மற்றுமொரு குழு

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 14 பேர் இன்று (03) நாடு திரும்பியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் உள்ள கப்பலொன்றில் பணியாற்றிய இலங்கை பணியாளர்கள் 13 பேர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேபோல ஜப்பானில் இருந்து வருகைத்தந்த ஒருவரும் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த மேலும் 55 பேர் இன்று அவர்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்புவதாக கொவிட்19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.