வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பு!
வவுனியா மாவட்டத்தில் 119811 வாக்காளர்களுக்கு 141 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் அனைத்தும் வவுனியா மாவட்ட செயலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.