மசாஜ் சேவை என தெரிவித்து பண மோசடி: 6 பேர் கைது

மசாஜ் சேவை என தெரிவித்து பண மோசடி: 6 பேர் கைது

கொழும்பு(Colombo) - பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் சேவை என தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மசாஜ் செய்து தருவதாக கூறி நபர் ஒருவரை அழைத்து வந்து தாக்கி கத்தியை காட்டி அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபாவை இணைய வங்கிச்சேவை மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட நபரின் பணப்பையில் இருந்த 15,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 54 வயதான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மேலும் 04 சந்தேகநபர்கள் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் சேவை என தெரிவித்து பண மோசடி: 6 பேர் கைது | Massage Service Money Fraud 6 People Arrestedமேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.