இலங்கையில் 2000 ரூபாயால் குறைந்த தங்க விலை

இலங்கையில் 2000 ரூபாயால் குறைந்த தங்க விலை

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் இன்று குறைந்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 384,000 ரூபாயாக குறைந்துள்ளது.

 

தங்க விலை

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

இலங்கையில் 2000 ரூபாயால் குறைந்த தங்க விலை | Gold Price Rate Reduced By Rs 2000 In Sri Lanka

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.