அனைத்து வாக்காளர்களுக்கும் அதிகபட்ச சுகாதாரப் பாதுகாப்பு : மஹிந்த தேஷப்ரிய உறுதி!
இதேவேளை பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அதிகபட்ச சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனை அல்லது பென்சில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததன் பின்னர் வாக்காளர்கள் வெளியேறும்போது கைகளை சுத்தப்படுத்ததுதல் அவசியமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வாக்காளர்களுக்கு கிருமி தொற்று ஏற்படக் கூடிய சாத்தியம் இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே பொதுத்தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் வாக்கு சீட்டுகள் வாக்களிப்பு மத்தியநிலையங்களில் கடுமையான பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்
எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்குகளின் எண்ணிக்கை ஆரம்பிக்கும் வரை வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
வாக்கெண்னும் நிலையங்களுக்கு அரசியல் கட்சிகள் அல்லது சுயாதீன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருவர் மாத்திரம் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அதிகபட்ச சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிப்பு நிலையங்கள் வாக்காளர்களுக்கு பாதுகாப்பானதாகவும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லாதிருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை மக்கள், கொரோனா வைரஸ் அச்சத்தை விடுத்து தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் முறையாக பயன்படுத்துமாறும் தேஷபிரிய கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ”அமைதி காலகட்டத்தில் ” தேர்தல் சட்டவிதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரசாரபேரணிகள் , வீடுகளுக்கு சென்று முன்னெடுக்கப்படும்பிரசார நடவடிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், வேட்பாளர்களின் விளம்பர பலகைகள் காட்சிப்படுத்தல் மற்றும் சுவரொட்டிகள் விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுவதோடு சுதந்திரமானதும் நியாயமானதுமான பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு ஒத்துழைப்புவழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.