இலங்கை முழுவதும் பாடசாலை மாணவர்களுக்கு சீனா சீருடைத் துணி
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று(10.11.2024) மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா பல வழிகளிலும் உதவி செய்து வருகிறது.
அந்த வகையில் இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் 2025 ஆம் ஆண்டு சீருடை துணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்” என்றார்.

மேலும், அனர்த்த நிவாரணத்திற்காக, சீனா(China) வழங்கிய சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதிகள், அனர்த்த நிவாரணத்திற்க இலங்கை திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 30 வரையான இயற்கைப் பேரிடர்களால் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.