மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படும்!

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படும்!

கொழும்பு 05, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகள் எதிர்வரும் இரு  நாட்கள் பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய  நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகள் பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்   சுமித் சீ.கே. அலகக்கோன்   தெரிவித்துள்ளார்.

பொதுத்  தேர்தல்கள் செயற்பாடுகளுக்காக கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்குள், கொழும்பு கிழக்கு தேர்தல் பிரிவிற்குரிய 06 மற்றும் 07 ஆம் இலக்க வாக்கு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதன் காரணமாக மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களம் குறித்த இரு தினங்கள் மூடப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலகக்கோன் தெரிவித்துள்ளார்.