முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்று வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்று வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம், நேற்று (08.11.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்று வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி! | Mullaitivu Elephant Attacked Family Man Injured

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒட்டுசுட்டான் இத்திமடு வீதியில் நேற்று காலை 8.30 மணியளவில் வயல் காவலுக்காக மிதிவண்டியில் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சம்மளங்குளம் பகுதியினை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்று வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி! | Mullaitivu Elephant Attacked Family Man Injured

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த விவசாயி ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.