இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி | Fatal Accident In Ragala Killed Six Injured

கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்து குறித்து இராகலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்