
நாடளாவிய ரீதியில் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு!
ரீலங்காவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் கடமைகள் முடியும் வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.