மர்மமான முறையில் உயிரிழந்த இளம் வர்த்தகர்; பொலிஸார் தீவிர விசாரணை

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் வர்த்தகர்; பொலிஸார் தீவிர விசாரணை

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் கொலனியா பகுதியில் இளம் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (05) மேற்படி நபர் தரையில் வீழ்ந்துள்ளதாகவும், அவரை அவரது மகன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக கூறப்படுகின்றது.

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் வர்த்தகர்; பொலிஸார் தீவிர விசாரணை | A Young Businessman Who Died Mysteriouslyசம்பவத்தில் கந்துருவெல, முஸ்லிம் கொலனியில் வசிக்கும் 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஒரு வர்த்தகர் என்பதும், அவர் தனது வியாபார இடத்திலிருந்து காரில் வீட்டிற்கு வந்திருப்பதும், கார் இயக்கத்தில் இருக்கும் போதே நெஞ்சில் இரத்தக் காயத்துடன் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தாக்குதல் சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் சடலம் நீதவான் பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.