
மேல் மாகாணத்தில் 319பேர் கைது
மேல் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கை இன்று அதிகாலை 5 மணி வரை இடம்பெற்றுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பில் அதிகளவானோர், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.