36 மணிநேரத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

36 மணிநேரத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (02) மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில்,

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

36 மணிநேரத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு | 36 Hours Weather Alert Srilankaமாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

 நாட்டின் பல பாகங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சூழ்நிலை தற்போதும் சாதகமாக இருப்பதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.