பாதாள குழு முக்கியஸ்தரான அங்கொட லொக்காவுக்கு உதவிய இலங்கை பெண் உட்பட மூவர் கைது

பாதாள குழு முக்கியஸ்தரான அங்கொட லொக்காவுக்கு உதவிய இலங்கை பெண் உட்பட மூவர் கைது

இலங்கையின் பாதாள குழு முக்கியஸ்தரான அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்க உதவிய இலங்கை பெண் உட்பட மூவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் அங்கொட லொக்காவின் உடல் கோவையில் கண்டெடுக்கப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணைகளை தொடர்ந்து அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே  அங்கொட லொக்காவுடன் தங்கியிருந்தாக கூறப்படும் இலங்கை பெண்ணான அமானி தாஞ்சி (வயது 27), மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (வயது36), திருப்பூரைச் சேர்ந்த எஸ்.தினேஸ்வரன் (வயது 32) இவ்வாறு போலியான ஆவணங்களை தயாரித்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சதி மற்றும் ஆவணங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்