
தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கு அரசியலில் பாரிய மாற்றம்
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கு அரசியல் பாரியமாற்றத்தை காணும் என முன்னாள் வடமாகாண ஆளுநரும் தற்போதைய சுதந்திரக்கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான சுரோன் ராகவன் தெரிவித்துள்ளார்.
எக்கனமிநெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு
எனது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கம் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
யாழ்ப்பாணத்தில் குடிநீர் திட்டங்கள் விமானநிலையத்தை தரமுயர்த்துவது போன்ற போன்ற அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்காரணமாக வடபகுதி அரசியல் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அபிவிருத்தி திட்டங்களை இணைத்துகொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் வடக்குகிழக்கு கட்சிகள் அரசாங்கத்துடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அமைச்சரவை பதவிகளை ஏற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.