யாழில் தனியே வசித்த பெண் உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன..

யாழில் தனியே வசித்த பெண் உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன..

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் தனியே வசித்த பெண் உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன? | Woman Lived Alone In Jaffna Fell Into Committed

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியாக வாசித்து வந்த குறித்த பெண் மன விரக்தியில் இன்று அதிகாலை தவறான முடிவு எடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.