எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் அண்மைய வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு! | Weather Forecast For The Next 36 Hours Sri Lankaகுறித்த மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு! | Weather Forecast For The Next 36 Hours Sri Lanka

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.