நடமாடும் சேவை ஊடாக குறைந்த விலையில் தேங்காய்

நடமாடும் சேவை ஊடாக குறைந்த விலையில் தேங்காய்

தென்னை பயிர்ச்செய்கை சபையினால் மஹரகம (Maharagama) நகரில் குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்கான நடமாடும் வாகன சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டினை  நிவர்த்தி செய்யும் நோக்கில் குறித்த பகுதியில் இன்று (25) இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, ஒருவருக்கு தலா 05 தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 5,000 தேங்காய்களை 100 முதல் 120 ரூபா வரை விற்பனை செய்ய மஹரகமவில் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடமாடும் சேவை ஊடாக குறைந்த விலையில் தேங்காய் | Coconut Price Increase In Sri Lankaஇது தவிர புத்தளம், குருநாகல் தோட்ட நிறுவனம் மற்றும் தென்னை ஆராய்ச்சி சபை என்பனவும் நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றன.

இதேவேளை ஜனாதிபதி உடனடியாக தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையினை அறிமுகப்படுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.