யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... வீட்டிற்குள் ஓடி கதறிய மாணவன்!

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... வீட்டிற்குள் ஓடி கதறிய மாணவன்!

யாழ்ப்பாணத்தில் உள்ள அராலி பகுதியில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... வீட்டிற்குள் ஓடி கதறிய மாணவன்! | Lightning Strike In Jaffna School Student Affected

யாழ். அராலி மேற்கு பகுதியில், நேற்று (23-10-2024) மாணவன் ஒருவன் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்னர், இடி - மின்னலுடன் கூடிய வானிலை காணப்பட்ட வேளை வீட்டிற்கு வெளியே சென்றுள்ளான்.

இதன்போது மாணவன் மீது மின்னல் தாக்கிய நிலையில் வீட்டிற்குள் ஓடிச்சென்று கதறியுள்ளார்

மேலும், அராலி மேற்கு பகுதியில் உள்ள வீட்டின் மின் இணைப்பானது மின்னல் தாக்கத்தினால் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது,

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... வீட்டிற்குள் ஓடி கதறிய மாணவன்! | Lightning Strike In Jaffna School Student Affected  இதன்போது விரைந்து செயற்பட்டு மின்சார இணைப்பினை தடை செய்த நிலையில் பாரிய அளவு அசம்பாவிதம் எவையும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இடி மின்னல் ஏற்படும் வேளைகளில் வீட்டிற்கு வெளியே அநாவசியமாக நடமாடுவதை தவிர்ப்பதன் மூலம் இடி மின்னல் தாக்கத்தில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.