பிரான்ஸில் வைத்தியர் அர்ச்சுனாவின் உருவத்தை பச்சை குத்திய பெண்! யாழ்ப்பாண கனவனின் செயல்

பிரான்ஸில் வைத்தியர் அர்ச்சுனாவின் உருவத்தை பச்சை குத்திய பெண்! யாழ்ப்பாண கனவனின் செயல்

பிரான்ஸ் நாட்டில் உள்ள றியேம்ஸ் பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவி அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பிரான்ஸில் வைத்தியர் அர்ச்சுனாவின் உருவத்தை பச்சை குத்திய பெண்! யாழ்ப்பாண கனவனின் செயல் | Woman Tattooed Doctor Archuna In France Jaffna Man

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பப் பெண் யாழ்ப்பாண வைத்தியர் அர்ச்சுனாவின் உருவத்தை தனது உடலில் பச்சை குத்தியதை அறிந்த கணவன் மனைவியின் பச்சை குத்திய கைப் பகுதியை பொல்லால் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.

மேலும், மனைவியின் முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் கைகளால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

பிரான்ஸில் வைத்தியர் அர்ச்சுனாவின் உருவத்தை பச்சை குத்திய பெண்! யாழ்ப்பாண கனவனின் செயல் | Woman Tattooed Doctor Archuna In France Jaffna Man  இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அர்ச்சுனாவுக்கு ஆதரவான ரிக்ரொக் வலைத்தளத்தில் பெரும் கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, வெளிநாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பப் பெண்கள் ரிக்ரொக் மற்றும் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கி வருவதுடன் பெருமளவு பணத்தையும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது வழங்கி வருவதாகவும் தெரியவருகின்றது.