பொகவந்தலாவையில் தீ மூட்டி கொண்ட சிறுவன்! மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

பொகவந்தலாவையில் தீ மூட்டி கொண்ட சிறுவன்! மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

பொகவந்தலாவ (Bogawantalawa) பகுதியில் சிறுவன் ஒருவன் தனக்கு தானே தீ மூட்டி கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (22.10.2024) இரவு பத்துமணியளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ செப்பல்டன் என்.சீ. தோட்டபகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவனே இவ்வாறு தனக்குதானே தீ மூட்டி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவனின் தந்தை மற்றும் தாயாருக்குமிடையில் தினந்தோறும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பொகவந்தலாவையில் தீ மூட்டி கொண்ட சிறுவன்! மேலதிக விசாரணையில் காவல்துறையினர் | 12 Year Old Sets Himself On Fire In Protest

இதேபோல் நேற்றைய தினமும் இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டதாகவும் எனது தாயாரை தாக்கினால் தான் தீ வைத்து கொள்வதாக கூறி தனக்கு தானே தீவைத்து கொண்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதன் பிறகு சிறுவனின் தந்தை தயாரை தாக்கியதை அடுத்தே குறித்த சிறுவன் மண்ணெண்ணெயினை உடம்பு பகுதியில் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளான்.

சிறுவனின் முகப்பகுதியில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் டிக்கோயா (Dikoya) கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவையில் தீ மூட்டி கொண்ட சிறுவன்! மேலதிக விசாரணையில் காவல்துறையினர் | 12 Year Old Sets Himself On Fire In Protest

இந்த சிறுவன் கற்பித்தல் செயல்பாட்டில் இருந்து இடை விலயதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதோடு எரிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.