மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து குடும்பப்பெண் உயிரிழப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) தனக்கு தானே தீ வைத்துகொண்டு தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (20) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் சம்பவதினமான இன்று (20) பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.