யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு (19-10-2024) சுன்னாகம் சந்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினையே வாள் வெட் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, வாள்வெட்டுக்கு இலக்கானவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.