வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

இலங்கையில் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞனும், அவனது சிறிய தந்தையுமே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

தொம்பே, வெலிவேரிய மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பகுதிகளில் பெண்களை துஷ்பிரயோகம் செய்து வீடுகளில் பொருட்களை கொள்ளையிடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக கடந்த சனிக்கிழமை ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இது தொடர்பில், கம்பஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்களால் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கடந்த 6 நாட்களாக குறித்த கொள்ளையர்களின் பயணம் தொடர்பிலான தேடலில் ஈடுபட்டிருந்த மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இன்று (16) அதிகாலை இருவரையும் கைது செய்துள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrestedமல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் போதே ,அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது இருவரும் நிஞ்சா ஆடைகளை போன்ற ஆடைகளையே அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவங்களுக்காக பயன்படுத்திய பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.