தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 19 பேருக்கு நேர்ந்த கதி
கம்பஹா,திவுலப்பிட்டிய , படல்கம பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் இன்று (14) இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் 50 வயதுடையவராவார்.

தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.