கோர விபத்தில் குழந்தை உயிரிழப்பு

கோர விபத்தில் குழந்தை உயிரிழப்பு

கம்பளையில் ஜீப் வண்டி ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (13) பிற்பகல் கம்பளை நகரில், கம்பளை திசையிலிருந்து நாவலப்பிட்டி திசை நோக்கி பயணித்த போதே இடம்பெற்றுள்ளதாக இந்த விபத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கோர விபத்தில் குழந்தை உயிரிழப்பு | A Child Died In An Accident

ஜீப் வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிறுவன் மற்றும் மற்றும் ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்தது.

விபத்தில் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயதுடைய ஆண் குழந்தையே உயிரிழந்தது. விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.