இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். தீவகப் பகுதிக்கு விஜயம்
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) தீவக பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின் பிரதிநிதிகளை 12.10.2024 சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று (12.10.2024) காலை யாழ்.புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமுக நிலைய மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ, தீவக பெண்கள் வலையமைப்பினர், தீவக பகுதி கடற்றொழில் அமைப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.