அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும்! சிவப்பு எச்சரிக்கை

அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும்! சிவப்பு எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்ப நிலையின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமைகள் ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும்! சிவப்பு எச்சரிக்கை | Heavy Rain In Next 24 Hours Red Alert Sri Lanka

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும்! சிவப்பு எச்சரிக்கை | Heavy Rain In Next 24 Hours Red Alert Sri Lankaமாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.