மட்டக்களப்பில் இளம் நடத்துநரை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்தரவதை செய்த பேருந்து உரிமையாளர்!

மட்டக்களப்பில் இளம் நடத்துநரை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்தரவதை செய்த பேருந்து உரிமையாளர்!

மட்டக்களப்பில்  உள்ள பகுதியொன்றில் நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது.

இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்று (07-10-2024) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இளம் நடத்துநரை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்தரவதை செய்த பேருந்து உரிமையாளர்! | Bus Owner Tied Beat The Conductor In Batticaloaஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துநர் மீது தனியார் பேருந்து உரிமையாளர் குற்றஞ்சாட்டி கடமையில் இருந்த இளைஞரை இன்று பகல் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியில் உள்ள பாழடைந்த காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

மட்டக்களப்பில் இளம் நடத்துநரை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்தரவதை செய்த பேருந்து உரிமையாளர்! | Bus Owner Tied Beat The Conductor In Batticaloa

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து, பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.