கொழும்பு வேட்பாளரை குறிவைத்து அசிட் தாக்குதல்
எதிர்வரும் புதன் கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் மொறட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவை குறி வைத்து இன்று அசிட் திராவகம் வீசப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் அவரது காரின் மீது திராவகம் வீசப்பட்டுள்ளது.
மொறட்டுவை வாராந்த சந்தைக்கு அருகில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றிருந்த போதே அவர் இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.
சம்பவம் குறித்து மொறட்டுவை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.