கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்!

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்!

கொழும்பு - புறக்கோட்டை வாழைத்தோட்டம் பகுதியில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்! | Colombo Pettah Youth Murder Shocking Information

குறித்த கொலைச் சம்பவம் நேற்றையதினம் (04-10-2024) பிற்பகல் வாழைத்தோட்டம், பீர்சைபு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரை கும்பல் ஒன்று துரத்திச் சென்று தாக்கும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்! | Colombo Pettah Youth Murder Shocking Information

கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில்,

“எங்கள் வீட்டுக்கு அருகில் இன்னொரு சிறிய வீடு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டோம். தண்ணீர் கசிவு உள்ளது என்று சொன்னார்கள்.

நாளை வந்து சரி செய்து தருகிறேன் என்றேன். பின்னர் அவரும், அவருடைய அம்மாவும் எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் அம்மாவை திட்டிவிட்டு சென்றுள்ளனர்.

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்! | Colombo Pettah Youth Murder Shocking Information

பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்று கேட்டேன். என்னை அடிக்க வந்தார். என் அம்மாவை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள்.

அதற்கு எனது அண்ணா அவரை தாக்கினார். அதற்காக அவர் தனது வீட்டிற்கு சென்று இரண்டு பேரை அழைத்து வந்தார்.

பின்னர் அவர்கள் எனது அண்ணாவை அடித்தனர். நான் போ போகும் போது அண்ணாவை சிலர் தூக்கி வந்தனர். அண்ணா உயிரோடு இல்லை.

மேலும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு 12 பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.