தான் ஓட்டிய மோட்டார் சைக்கிளால் பலியான மாணவன்

தான் ஓட்டிய மோட்டார் சைக்கிளால் பலியான மாணவன்

காத்தான்குடியில் பாடசாலை மாணவன் ஒருவன் தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தான் ஓட்டிய மோட்டார் சைக்கிளால் பலியான மாணவன் | Student Killed By The Motorcycle He Was Riding

சம்பவத்தில் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சியை மார்க்கட் வீதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே பரிதாபகரமான முறையில் உயிரிழந்தவராவார்.

தனது இல்லத்திற்கு முன்னால் உள்ள சிறிய வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென சறுக்கி கீழே விழுந்து விபத்துகுள்ளாது.

தான் ஓட்டிய மோட்டார் சைக்கிளால் பலியான மாணவன் | Student Killed By The Motorcycle He Was Riding

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஆவார். மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.