
பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது- துறைமுக தொழிற்சங்கம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்தவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
தங்காலையில் அமைந்துள்ள ஹால்டன் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகிய கலந்துடையாடல் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குரியது என எழுத்துமூலமான வாக்குறுதி வழங்குமாறு கோரி, துறைமுக தொழிற்சங்கங்கள் சத்தியாகிரக போராட்டத்தை 5ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வைத்துள்ள விடயங்களுக்கு பிரதமர் தீர்வை வழங்குவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.