துறைமுக தொழிற்சங்கங்கள் 5ஆவது நாளாகவும் சத்தியாகிரக போராட்டம்

துறைமுக தொழிற்சங்கங்கள் 5ஆவது நாளாகவும் சத்தியாகிரக போராட்டம்

துறைமுக தொழிற்சங்கங்கள் சத்தியாகிரக போராட்டத்தை 5ஆவது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குரியது என எழுத்துமூலமான வாக்குறுதி வழங்குமாறு கோரியே இவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை  தொடரவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த போராட்டம் காரணமாக துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் 23 துறைமுக தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் ஊடாகவே தீர்க்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.