வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின்  ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்று கொரோனா தொற்றாளர்களாக எவரும் அடையாளம் காணப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 2815 பேரில் தற்போது 365 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.