பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.