அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் தமக்கு தெரிவிக்குமாறும் பணியாளர்களை Pafrel அமைப்பு கோரியுள்ளது.

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு | Important Notice For Government Private Employeesஅதன்படி, அரச அதிகாரிகளின் சிறப்பு விடுமுறையாக ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்ல குறைந்தபட்ச நேரத்தை 4 மணி நேரம் என்று குறிப்பிடுகின்றது.

இருப்பினும், எழுத்துப்பூர்வ உத்தரவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு விடுமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், வாக்களிக்க ஊழியர்களுக்கு முதலாளிகள் விடுமுறை அளிப்பதில்லை என்று முறைப்பாடு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்கும் வருவதற்கும் அனுமதிக்கும் தூரம், நேரம் தொடர்பிலான அறிவிப்பினை மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கியுள்ளது.

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு | Important Notice For Government Private Employees இதற்கமைய, பணியிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு 40 கிமீ அல்லது அதற்கும் குறைவான தூரத்தில் உள்ளவர்களுக்கு அரை நாள் விடுமுறை

பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கான தூரம் 40 கிமீ முதல் 100 கிமீ வரை - ஒரு நாள் விடுமுறை

பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கான தூரம் 100 கிமீ முதல் 150 கிமீ வரை - 1 1/2 நாட்கள் விடுமுறை

பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு 150 கிமீ - 2 நாட்களுக்கு மேல் விடுமுறை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முதலாளியும் சிறப்பு விடுப்புக்கு விண்ணப்பித்த நபர்கள் மற்றும் விடுப்பு வழங்கப்படும் காலம் ஆகியவற்றைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காண்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.